

சேதமடைந்த நீர் பாசனத்தை சரிசெய்வதற்கு RIVULIS மட்டுமே சிறந்த REELVIEW™ தொழில்நுட்பத்தை உங்களுக்கு வழங்குகிறது.
“Rivulis டிரிப் லைன்/ Tape வாங்கினால், ReelView-க்கான இலவச பயன்களை பெறுவீர்கள்*, நீங்கள் பயிர் செய்யும் நிலத்தின் செயற்கைக்கோள் படங்களையும் வேளாண் நிபுணர்களின் உற்பத்தி ஆலோசனைகளையும் உங்களுக்கு அலைப்பேசி வாயிலாக நேரடியாக வழங்குகிறது. எவ்வாறு தொடங்குவது என்பதையும் சிறிய அளவில் உள்ள சிக்கல்கள் பெரியதாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிவதற்கு Reelview எவ்வாறு உதவும் என்பதை கீழே காணவும்.
3 எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி தொடங்கவும்
எங்கள் நிறுவன பொருளில் உள்ள ReelView QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
உங்கள் கணக்கை அமைக்கவும் (இது எளிதானது)

உங்கள் நிலத்தின் எல்லைகளை அமைப்பதற்கு எங்கள் விரைவான வழிமுறைகளை பாருங்கள்
- English
- தமிழ்
- हिन्दी
- ಕನ್ನಡ
- ગુજરાતી
- తెలుగు
- मराठी
ஏவ்வாறு பயன்படுத்துவது/பயன்படுத்துவதன் பலன்கள்
பயிர் அட்டவணை

பயிரின் ஈரத்தன்மை மாறுபாடு

- பல ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தரவுகளைக் கடந்த பருவங்களில் சேகரிக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிட்டு உங்கள் பயிர்களின் வளர்ச்சியை பகுப்பாய்வு செய்யவும்.
- செயலியில் வண்ண மாற்றங்களால் குறிப்பிடப்படும் பயிர்கள் மற்றும் பயிரின் ஈரப்பதத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களைக் கவனிப்பதன் மூலம், உங்கள் அலைபேசி வாயிலாக நேரடியாக பிரச்சினைகள் உள்ள பகுதியை கண்டறியலாம்.
- உங்கள் நிலங்களுக்கான பிரத்யேகமான, உயர் தரம் வாய்ந்த உள்ளூர் வானிலைத் தகவலை வழங்குகிறது.
- வண்ணக் குறியீடானது உங்கள் நிலங்களில் உள்ள பயிர்களின் அடர்த்தி மற்றும் பயிர் ஈரப்பதத்தின் மாறுபாட்டை வெளிப்படுத்துகிறது, இது நீர்ப்பாசனம் மற்றும் பயிர் ஆரோக்கியம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் கண்டறிய உதவுகிறது.
- நீர்ப்பாசனம், உரம், நோய் தாக்குதல் மற்றும் பிற சிக்கல்களை நீங்கள் வெறும் கண்ணால் பார்ப்பதற்கு முன்பே, செயற்கைகோள்களின் NDVI படங்கள் மூலம் கண்டறிய முடியும்.
உங்கள் வயலின் வரைபடத்தை எப்படி தெரிந்துகொள்வது என்பதை அறிக
- English
- தமிழ்
- हिन्दी
- ಕನ್ನಡ
- ગુજરાતી
- తెలుగు
- मराठी
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
REELVIEW-வில் நான் எவ்வாறு பதிவு செய்வது?
REELVIEW-வில் பதிவு செய்வதற்கு, இந்த 3 எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
புதிய நிலத்தின் எல்லைகளை எவ்வாறு அமைப்பது?
முகப்புப் பக்கத்தில் நிலங்கள் வரைபடத்திற்கு அடுத்துள்ள + பொத்தான்களைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் நிலத்தை அமைப்பதற்கான விரைவான வழிகாட்டிக்கு, உங்கள் நில வீடியோவை அமைப்பதற்கான REELVIEW வழிகாட்டியைப் பார்க்கவும்.
பயிர் அட்டவணை படத்தில் நான் என்ன பார்க்கலாம்?
உங்கள் வயலின் வீடியோவை எப்படிப் பார்ப்பது என்பதை அறிய “REELVIEW ஐப் பார்க்கவும்“.
ஏன் எனது நிலங்களின் முழு வரலாற்றையும் என்னால் பார்க்க முடியவில்லை?
வயலின் படங்களை தொகுக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம், நீங்கள் கடந்த 3 வருட படங்களைக் காண முடியும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், எங்கள் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.
படம் கிடைக்கவில்லை என்று ஏன் சொல்கிறது?
மேக மூட்டம் போன்ற காரணிகளால் கிடைக்ககூடிய படங்களின் தன்மை பாதிக்கப்படுகிறது. மாற்றுத் தேதியில் தேர்ந்தெடுக்க முயற்சிக்கவும்.
நான் ரிவுலிஸ் பொருட்களை வாங்கினேன் ஆனால் என்னிடம் REELVIEW QR குறியீடு இல்லை?
இந்த QR குறியீட்டை உங்கள் அலைபேசி மூலம் ஸ்கேன் செய்து, உங்கள் மொபைலில் REELVIEW திறந்திருக்கும் போது, “என்னிடம் தயாரிப்பு QR குறியீடு இல்லை” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் வாங்கிய Rivulis தயாரிப்பைத் தேர்வுசெய்து, பதிவு செய்வதைத் தொடரவும். பதிவு செய்வதற்கான கூடுதல் உதவிக்கு பின்வரும் 3 எளிய வழிமுறைகளைப் பார்க்கவும்.
கீழே உள்ள பட்டன் ஐ கிளிக் செய்யவும் , உங்கள் மொபைலில் REELVIEW திறந்திருக்கும் போது, ”என்னிடம் தயாரிப்பு QR குறியீடு இல்லை” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் வாங்கிய ரிவுலிஸ் பொருளை தேர்ந்தெடுத்து, பதிவைத் தொடரவும். பதிவு செய்வதற்கான கூடுதல் உதவிக்கு 3 எளிய வழிமுறைகளை பார்க்கவும்.
பயிரின் ஈரத்தன்மை மாறுபாட்டு படத்தில் நான் என்ன பார்க்கிறேன்?
“உங்கள் வயலின் வீடியோவை எப்படிப் பார்ப்பது என்பதை அறிய” REELVIEW ஐப் பார்க்கவும்.
ஏன் என்னால் அதிகமான நிலங்களை உருவாக்க முடியாது?
REELVIEW ஆனது இலவசப் படக் கண்காணிப்புப் பகுதிக்கான (ஹெக்டேர் / ஏக்கர்) குறிப்பிட்ட அளவுகளை கொண்டுள்ளது.
உங்கள் REELVIEW வரம்பை அடைந்தால், உங்களின் தற்போதைய நிலங்களில் ஒன்றை நீக்கிவிட்டு புதிய ஒன்றைச் சேர்க்கலாம் அல்லது அதிக பகுதியை சேர்ப்பதற்கு மன்னா நீர்பாசனத்தில் உங்கள் கணக்கைப் பதிவுசெய்யலாம்.
எதனால் நான் பிழையை பெற்றேன்: வயலில் இருந்து வெகு தொலைவில் இருப்பதனால ?
ஒவ்வொரு சந்தாவிற்கும் அனைத்து நிலங்களும் பரிந்துரைக்கப்பட்ட சுற்றளவில் இருக்க வேண்டும். அதிக தொலைவில் உள்ள நிலங்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என்றால், அதை மன்னா நீர்பாசனத்தில் உங்கள் கணக்கை பதிவு செய்யவும்.
நான் REELVIEW கணக்கைத் திறந்துள்ளேன், எனது கணக்கில் மீண்டும் எவ்வாறு உள்நுழைவது?
உங்கள் மொபைல் போனில் உள்ள வலைத்தள https://reelview-rivulis.com/ என்ற இணைய முகவரியை உள்ளிட்டு உங்கள் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும். நீங்கள் ஏற்கனவே உள்நுழைந்திருந்தால், அது உங்களை நேரடியாக செயலியில் உள்ள முகப்புப் பக்கத்திற்கு கொண்டுச் செல்லும். செயலியைக் கண்டறிவதை எளிதாக்க, உங்கள் முகப்புத் திரையில் REELVIEW செயலிக்கான இணைப்பைச் சேர்க்கலாம்.
ஆண்ட்ராய்டு:
நீங்கள் செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ளபோது:
1. திரையின் இடது மூலையில் உள்ள மெனு button ஐ தேர்ந்தெடுக்கவும்.
2. மெனு திரையிலிருந்து “முகப்புப் பக்கத்தில் சேர்” என்பதைத் தேர்வுசெய்யவும்
Reelview செயலியின் சின்னம் உங்கள் தொலைபேசியின் முகப்புத் திரையில் சேர்க்கப்படும்.
ஐபோன்:
நீங்கள் செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ளபோது:
1. safari பக்கத்தின் கீழே உள்ள சின்னத்தை அழுத்தவும்.
2. கீழே தள்ளி, “முகப்புத் திரையில் சேர்” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
3. “சேர்” என்பதை அழுத்தவும்.
REELVIEW செயலியின் சின்னம் உங்கள் மொபைலின் முகப்புத் திரையில் சேர்க்கப்படும்.
நான் Eurodrip தயாரிப்பை வாங்கியுள்ளேன், REELVIEW ஐப் பயன்படுத்தலாமா?
ஆம், Eurodrip பிராண்டட் தயாரிப்புகள் REELVIEW க்கான அனுமதி பெற்றுள்ளன.
எங்களை தொடர்பு கொள்ளவும்
Rivulis REELVIEW மீதான உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. கீழேயுள்ள படிவத்துடன் உங்கள் விசாரணையை எங்களுக்கு அனுப்பவும். நீங்கள் வளர உதவுவதற்காகவே நாங்கள் இங்கு இருக்கிறோம்.
*குறிப்பிட்ட புவியியல் நிலப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பொருந்தும். முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.